
DNPL 2021: Salem Spartans miss out on playoffs! (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 41 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணிக்கு கேப்டன் அபாரஜித் - ரஞ்சன் பால் இணை சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. பின் 38 ரன்களில் அபாரஜித் ஆட்டமிழந்து வெளியேறினார்.