
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 57 ரன்கள் எடுத்த நிலையில் டூ பிளெசிஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 37 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்சலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ராஜபக்ஷாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிறகு களமிறங்கிய சிக்கந்தர் ரஸா அதிரடியாக விளையாடி 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழ்னதார்.