-mdl.jpg)
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் டி20 போட்டிக்காக இந்திய அணி இன்று பயிற்சி முகாமில் பங்கேற்றனர். மாற்றங்கள் மட்டுமே எப்போதும் மாறாத ஒன்று. கபில்தேவ், கவாஸ்கர் காலத்திற்கு பிறகு சச்சின், கங்குலி காலம் வந்தது. அதன் பிறகு தோனி, யுவராஜ் , சேவாக் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.
இவர்களுக்கு பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா,ஷிகர் தவான் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டை ஆண்டனர். தற்போது இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை களத்திற்கு நுழைந்துள்ளனர். இதன் ஆரம்ப புள்ளி, வரும் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 2013ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.
விராட் கோலி, ரோஹித் ஆகியோர் கேப்டனாக இருந்தும், டி20 உலககோப்பையில் இந்தியாவால் இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறவில்லை. இதனால் சீனியர்களை நீக்கிவிட்டு டி20 கிரிக்கெட்டில் புதிய அணியை கட்டமைக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.