உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெற மாட்டார் - பார்த்தீவ் படேல்
உலகக் கோப்பை தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற மாட்டார் என பார்த்தீவ் படெல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பை தொடர் நெருங்க நெருங்க உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்பும் ஒவ்வொரு அணியிலும் அரங்கேறிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு அணியும், பல்வேறு விதமான தொடர்களில் தங்களது வீரர்களை ஈடுபடுத்தி சிறப்பாக செயல்படும் வீரர்களை கவனித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளில் திறமையான வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எந்த வீரரை அணியில் இணைத்துக் கொள்ளலாம் எந்த வீரரை நீக்கலாம் என்று அணித் தேர்வாளர்கள் பெருத்த சந்தேகத்தில் தவித்து வருகின்றனர்.
Trending
குறிப்பாக ஆஸ்திரேலியா மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் ஒவ்வொரு அணியும் தகுதியான சுழற் பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அவர்கள் தெளிவாக யோசித்து அணியை தேர்ந்தெடுக்கும் வகையில் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய உயர்வான ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரியப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியில் சஹால், குல்தீப் ஆகிய இரு வீரர்களை உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைத்த நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அஸ்வினை களமிறக்கி உள்ளது. உலகக் கோப்பை தொடர் நெருங்கும் நேரத்தில் ஏன் இந்திய அணி டி20 தொடரில் இந்திய அணியின் ரெகுலர் வீரர் இல்லாத அஸ்வினை விளையாட வைத்தது ஏன் என அனைவருக்கும் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் அஸ்வின் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
இதுகுறித்து பார்திவ் பட்டேல் பேசுகையில்,“அடுத்த போட்டியில் அஸ்வினுக்கு பதில் பிஸ்னோய் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு அஸ்வின் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவர் என தெரியவில்லை. நேர்மையாக சொல்லப்போனால், எனக்கு குல்தீப், பிஸ்னாய் மற்றும் சஹால் ஆகிய சுழற்பந்து வீச்சாளர் கூட்டணி இந்திய அணிக்காக விளையாட வேண்டும். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தான் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now