
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுதினம் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஏற்கனவே கடந்த பல நாட்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் யார்? யார்? இடம்பிடிக்கப்போகிறார்கள் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் தற்போது அணிக்கு திரும்பி உள்ளதால் அணியின் தேர்வு எவ்வாறு இருக்கப் போகிறது என்றும் பந்துவீச்சாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
அந்த வகையில் தற்போது அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.