பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக சொதப்பிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
இந்த சீசனில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என கேகேஆர் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியானது மழை காரணமாக ஏற்பட்ட தாமதத்தினால் 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானதூ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. இதில் கேகேஆர் அணி தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களையும், நிதீஷ் ரானா 33 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
இதையடுத்து இலக்கை நொக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷான் 40 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கேகேஆர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “தோல்வியைத் தழுவியது நிச்சயம் கடினமான ஒன்று தான். எங்களுக்கு இப்போட்டியில் சிறப்பான அடித்தளம் கிடைத்த போதும், அதனை எங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பி இருக்கிறோம். சீராக ரன்களை சேர்க்காமல் விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளோம். இன்றைய போட்டிக்கான மைதானமும் கொஞ்சம் ஏற்ற, இறக்கமாக தான் இருந்தது.
ஆனால் கேகேஆர் அணி எங்களுக்கு நிர்ணயித்த இலக்கு சராசரி இலக்கு தான். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல் கேகேஆர் அணியின் பந்துவீச்சாளர்களும் சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி கொண்டே இருந்தனர். அடுத்த போட்டிக்கு முன் எந்த சிந்தனையும் இல்லை. சிறந்த கிரிக்கெட்டை உற்சாகமாக விளையாட வேண்டும். இந்த சீசனின் தொடக்கம் முதலே என் சிந்தனையாக உள்ளது. ஆனால் இந்த சீசனில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now