IND vs NZ: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவரை நீக்க வேண்டும் - டேனியல் விட்டோரி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் ரஹானேவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்கான டெஸ்ட் அணியில் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த விராட் கோலி மீண்டும் அணியில் இணைவதால் மிடில் ஆர்டரில் ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Trending
அந்த வகையில் அடுத்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரி 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து ரஹானேவை வெளியேற்றலாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரஹானே தற்போது ரன்களை குவிக்கும் தீவிரத்தில் இருந்தாலும் அவரது பேட்டிங் ஃபார்ம் தற்போது அவரை ரன் அடிக்க விடாமல் தடுத்து வருகிறது. இதன் காரணமாக அவருக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை. அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் மீண்டும் அவரது டெக்னிக்கை அவர் பலப்படுத்த நேரம் கிடைக்கும்.
பெரிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அழுத்தத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த வகையில் தற்போது ரஹானேவின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. சீனியர் வீரர் என்பதனால் அவர்மீது அதிக எதிர்பார்த்து உள்ளது. அதனை பூர்த்திசெய்ய நினைத்தே சீனியர் வீரர்கள் இதுபோன்ற அழுத்தத்தை சந்திக்கின்றனர்.
அதனை சரிசெய்ய அவருக்கு சிறிது நேரம் தேவை. ரஹானே சந்தித்திருக்கும் அதே நிலைமையில் தான் தற்போது புஜாராவும் சந்தித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now