
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலின் டாப் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
இதையடுத்து நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் ஆட்டாத்தைல் சன்ரைச்ர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு மூன்னேறியது. அதன்பின் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சுப்பர் கிங்ஸ் அணியானது பார்ல் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபியர் சுற்று ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன