
தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐபிஎல் பாணியில் நடத்தப்பட்ட இந்த தொடரின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் 2ஆவது எஸ்ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருந்தது.
ஆனால் தொடர் மழை காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி விளையாடவுள்ளது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன்
- இடம் - கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம், டர்பன்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)