
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 1: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலின் டாப் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நடப்பும் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று மீண்டும் கோப்பையை வெல்லவும், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடனும் விளையாடவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
- இடம் - நியூலேண்ட்ஸ், கேப்டவுன்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)