
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணை தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விகெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டெவான் கான்வே 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 02 ரன்களிலும், மார்கஸ் டொய்னிஸ் 29 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய டூ பிளெசிஸ் சதமடித்து மிரட்டினார்.
அதன்பின் சதமடித்த கையோடு டூ பிளெஸிஸும் 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 100 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே எடுத்தது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி தரப்பில் சௌரப் நேத்ரவால்கர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.