Advertisement

CSA T20 League: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம்!

டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரர் குயின்டன் டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Durban Super Giants appoint Quinton de Kock as skipper ahead of inaugural tournament
Durban Super Giants appoint Quinton de Kock as skipper ahead of inaugural tournament (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 29, 2022 • 03:40 PM

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் டி20 லீக் கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவிலும் டி20 லீக் கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த தொடரையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 29, 2022 • 03:40 PM

அந்த வகையில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதேபோல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

Trending

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாஃப் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட முன்னணி வீரர்களை வைத்துள்ளது. இந்த அணிக்கு டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரர் குயின்டன் டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அந்த அணி அதிகாரப்பூர்விட் ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் குயின்டன் டி காக், தற்போது டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளதால், அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement