
Dwayne Bravo becomes 2nd cricketer after Kieron Pollard to play 500 T20 matches (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்ற இவர் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் 37 வயதான பிராவோ டி20 கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். அவர் கரீபியன் லீக் 20 ஓவர் தொடரில் செயிண்ட் கீட்ஸ்-நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸை தோற்கடித்து கோப்பையை வென்றது. இப்போட்டியில் பிராவோ பங்கேற்றதன் மூலம் 500ஆவது டி20 போட்டியில் விளையாடினார்.