
இந்திய நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த திரைப்படம் 'புஷ்பா'. திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதிக வசூலையும் அள்ளிக் குவித்தது.
புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுனின் வித்தியாசமான நடிப்பு எந்த அளவுக்கு பேசப்பட்டதோ, அந்த அளவுக்கு படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்கள் ஆகியனவும், நேஷனல் லெவலுக்கு வைரலானது.
அதிலும் குறிப்பாக, பாடல்களில் வரும் நடன அசைவுகளுக்கு, பல சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடனமாடி, வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் கிரிக்கெட் வீரர்களான டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா உள்ளிட்டோர், புஷ்பா படம் தொடர்பான வசனங்கள் மற்றும் பாடல்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த லிஸ்ட்டில் தற்போது ஒரு பிரபல வெளிநாட்டு கிரிக்கெட் வீரரும் இணைந்துள்ளார்.