டி20 கிரிக்கெட்டில் சரித்திர சாதனைப் படைத்த டுவைன் பிராவோ!
டி20 கிரிக்கெட்டில் யாரும் நிகழ்த்தாத சாதனையாக 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான பிராவோ கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகி ஓய்வு பெறும் வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 91 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 161 போட்டியில் பங்கேற்று உள்ளார். அதுமட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20லீக் போட்டிகளிலும் பிராவோ தொடர்ந்து பங்கேற்று விளையாடி வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக்குகளில் அவர் தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் லண்டனில் தற்போது நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட ஹன்ட்ரட் தொடரில் அவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.
Trending
இந்த தொடரில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிராவோ ஓவல் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் இமாலய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அந்த சாதனையாதனில் இதுவரை டி20 கிரிக்கெட்டில் யாரும் நிகழ்த்தாத சாதனையாக 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். பிராவோவை தவிர டி20 கிரிக்கெட்டில் மற்ற எந்த பவுலும் இதுவரை 500 விக்கெட்டை கூட தொடாத வேளையில் பிராவோ முதல் நபராக 600 விக்கெட்டை தொட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிராவோ உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20லீக் போட்டிகளை சேர்த்து 522 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டியில் விளையாடிய பிராவோ தற்போது தனது 545ஆவது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அது மட்டும் இன்றி இதுவரை உலககெங்கிலும் 25க்கும் மேற்பட்ட அணிகளில் அவர் பங்கேற்று விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now