
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியிலும் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார் இந்திய அணியின் ஜாம்பவான் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. அவர் விடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தும் இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமியின் கடைசி தொடரில் கவுரவப்படுத்தினர்.