
ECB have announced a 16 member squad for the Royal London ODI series against India (Image Source: Google)
இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் ஜூன் 16ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டி முடிவின்றி அமைந்ததால், போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 27ஆம் தேதி பிரிஸ்டோலில் நடைபெறுகிறது. இதையடுத்து இத்தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்தர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அறிமுக வீராங்கனையான சோபியா டாங்க்லிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டாங்க்லிக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.