அபாரமான கேட்ச்சின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்லிஸ் பெர்ரி - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், ராக்வி பிஸ்ட் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஷிகா பாண்டே மற்றும் சரனி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் மெக் லெனிங் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
Trending
பின்னர் ஷஃபாலி வர்மாவுடன் இணைந்த ஜெஸ் ஜோனசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஃபாலி வர்மா 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், ஜெஸ் ஜோனசன் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15.3 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அந்த அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ஆர்சிபி அணி தரப்பில் மூன்றாவது ஓவரை ரேனுகா சிங் வீசிய நிலையில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட் டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங் மிட் ஆன் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார்.
Watching this on loop
Ellyse Perry takes a superb catch jumping in the air and RCB strike early
Updates https://t.co/pTL9a8wDJLTATAWPL | RCBvDC | RCBTweets pic.twitter.com/a0NTfvzJBfmdash; Women39;s Premier League (WPL) (wplt20) March 1, 2025Also Read: Funding To Save Test Cricket
மேலும் அவர் அந்த ஷாட்டை முழுமையாக விளையாடியதால் நிச்சயம் அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது 30யார்ட் வட்டத்தில் மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த எல்லிஸ் பெர்ரி தலைக்கு மேல் சென்ற அந்த பந்தை தாவிப்பிடித்தார். இதனால் 2 ரன்கள் மட்டுமே எடுத்த மெக் லெனிங் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் எல்லிஸ் பெர்ரி பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now