பயோ புளை மீறிய ரவி சாஸ்திரி; கடும் கோபத்தில் பிசிசிஐ!
இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியும் கோலியும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். இதனால்தான் ரவி சாஸ்திரி கரோனாவால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் நான்காவது நாளன்று இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரை தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த கடுமையான பயோ பபுளையும் மீறி ரவிசாஸ்திரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காரணம் என்ன ? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பு தளத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.
Trending
அதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் குழு மற்றும் சில வீரர்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் முகக் கவசம் அணியாமல் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டதாலேயே ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
யாரிடமும் எந்த தகவலையும் கொடுக்காமல் இதுபோன்று பொது இடத்திற்கு வீரர்களுடன் பயிற்சியாளர் குழு சென்றது தவறு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யிடம் தங்களது அதிர்ப்தியை தெரிவித்துள்ளது. மேலும் பிசிசிஐயும் இவ்வாறு நடந்து கொண்டதற்காக பயிற்சியாளர்கள் குழு மீதும், இந்திய வீரர்கள் மீதும் கோபப்பட்டு மேலும் பயோ பபுள் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now