
Emirates Board To Discuss Return Of Crowds For IPL 2021 In UAE (Image Source: Google)
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 31 போட்டிகள் நடைபெற்ற நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தாற்போது இத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது.
இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஐபிஎல் அணிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு படையெடுத்து வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரின் போது பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ மற்றும் எமிரட்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.