
England Women vs India Women 4th T20I Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
EN-W vs IN-W 4th T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர்
- இடம் - ஓல்ட் டிராஃபோர்டு மைதானம், மான்செஸ்டர்
- நேரம்- ஜூலை 09, இரவு 11.00 மணி (இந்திய நேரப்படி)