
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2ஆவது டெஸ்ட் நேற்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியது. ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோக்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் சேர்க்காமல் 129 ரன்களில் ஒல்லி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார் ராகுல். இதன்பிறகு இந்த டெஸ்டிலாவது நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, 1 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த், 37 ரன்களிலும், ஜடேஜா 40 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்துது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5, ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.