
ENG v IND, 4th Test: Jarvo 'Arrested On Suspicion Of Assault' Collision With Jonny Bairstow (Image Source: Google)
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
யூடியூப் தளத்தில் 1.27 லட்சம் ஆதரவாளர்களைக் கொண்டவர் ஜார்வோ. நேற்று, லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த ஜார்வோ, இங்கிலாந்து இன்னிங்ஸின்போது திடீரென மைதானத்துக்குள் ஓடிவந்தார். கையில் பந்துடன் வந்த ஜார்வோ, இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீது மோதினார்.
இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. உடனே பாதுகாவலர்கள் மைதானத்துக்குள் வந்து ஜார்வை அழைத்துச் சென்றார்கள். இதையடுத்து ஜார்வோவை மெட்ரோபாலிடன் காவலர்கள் கைது செய்துள்ளார்கள்.