Ashes 2023: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் நடப்பாண்டு ஆஷஸ் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
- இடம் - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்
- நேரம் - மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒரு நாள் போட்டி போன்று அதிரடியாக விளையாடுகிறது. 'டிரா'வை நோக்கி நகரும் போட்டிகளிலும் கூட 'ரிஸ்க்' எடுத்து விளையாடி முடிவை கொண்டு வந்து விடுகிறார்கள். பென் ஸ்டோக்ஸ்- பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூட்டணி சேர்ந்த பிறகு இங்கிலாந்து அணி 13 டெஸ்டில் விளையாடி 11இல் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு முந்தைய 17 டெஸ்டுகளை எடுத்துக் கொண்டால் அதில் இங்கிலாந்து ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது.
ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, டக்கெட், ஹாரி புரூக் என்று இங்கிலாந்து அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியாவை சீர்குலைக்கும் நம்பிக்கையுடன் ஆயத்தமாகி வருகிறார்கள். 40 வயதான ஆண்டர்சனுக்கு இது 180-வது டெஸ்டாகும். அவர் இன்னும் 15 விக்கெட் வீழ்த்தினால் 700 விக்கெட் மைல்கல்லை அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வில் இருந்து விடுபட்ட சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறார். முட்டிவலி பிரச்சினையால் அவதிப்படும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்வாரா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால் பந்து வீசுவதற்கு ஏற்ப உடல்தகுதியுடன் இருப்பதாக ஸ்டோக்ஸ் நேற்று பேட்டியின் போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றில் இந்தியாவை தோற்கடித்து மகுடம் சூடிய உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் போட்டியில் களம் காணுகிறது. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப்-3 இடங்களை பிடித்துள்ள லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட் சூப்பர் பார்மில் உள்ளனர்.
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்கள். பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன் ஆகியோர் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - மொத்தம் - 356
- ஆஸ்திரேலியா - 150
- இங்கிலாந்து - 110
- முடிவில்லை - 96
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - அலெக்ஸ் கேரி, பென் டக்கெட்
- பேட்ஸ்மேன்கள் - ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட், ஒல்லி போப்
- ஆல்-ரவுண்டர்கள் - பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன்
- பந்துவீச்சாளர்கள் - ஜேம்ஸ் ஆண்டர்சன், பாட் கம்மின்ஸ், ஸ்டூவர்ட் பிராட்
பிளேயிங் லெவன்
இங்கிலாந்து : பென் டக்கெட், ஜாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.
*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now