ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் நாளை 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த சூழலில், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து ரசிகர்கள் உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற ஆஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பர்மிங்ஹாமில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதற்கு அந்த அணி முதல் இன்னிங்ஸில் 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோ டிக்ளேர் செய்தது முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸின் சிறப்பான கேப்டன்ஷிப், பவுலிங், பேட்டிங் ஆகியவற்றுடன், உஸ்மான் கவாஜாவின் பேட்டிங்கும் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
Trending
இந்நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கும் போட்டி ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து ப திலடி கொடுக்குமா அல்லது, 2 ஆவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதிலும் பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் நாதன் லையன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பேட்டர்களை நிர்மூலமாக்கினார். அவருடன் இணைந்து ஜோஸ் ஹசில்வுட், ஸ்காட் போலாண்ட், பாட் கம்மின்ஸ் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தனாலும் ஒரு சில தவறுகளால் முதல் போட்டியில் கடுமையாக போராடினாலும் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் ஜோ ரூட், பேர்ஸ்டோவ், ஒல்லி போப் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர்களான ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. அவர்களைத் தாண்டி தற்போது இளம் வீரரான ஜோஷ் டங் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், அலெக்ஸ் கேரி
- பேட்ஸ்மேன்கள் - ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஜோ ரூட்
- ஆல்-ரவுண்டர்கள் - பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன்
- பந்துவீச்சாளர்கள் - நாதன் லியோன், பாட் கம்மின்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன்
உத்தேச லெவன்
இங்கிலாந்து: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஜோஷ் டோங், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் (கே), நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.
Win Big, Make Your Cricket Tales Now