
Eng Vs Aus 3rd Test Dream 11 Team: England Vs Australia 2nd Ashes Test Today Match Prediction! (Image Source: CricketNmore)
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் அந்த அணி மைதானத்தில் நடந்த 2ஆவது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
- இடம் - ஹெடிங்க்லே, லீட்ஸ்
- நேரம் - மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)