
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, நான்காவது டெஸ்ட் (Image Source: Google)
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை 3 போட்டிகள் கொண்ட முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்சில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றியை ருசித்தது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.