Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.

Advertisement
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 18, 2024 • 09:09 PM

England vs Australia, 1st ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு, கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 18, 2024 • 09:09 PM

ENG vs AUS 1st ODI: Match Details

  • போட்டி தகவல்கள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
  • நேரம் - செப்டம்பர் 19, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)

ENG vs AUS 1st ODI: Live Streaming Details

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தியின் வாயிலாக இத்தொடரை நேரலையில் காண முடியும். 

Trending

ENG vs AUS: Head-to-Head In ODIs

  • மோதிய போட்டிகள் - 156
  • ஆஸ்திரேலியா - 88
  • இங்கிலாந்து - 63
  • முடிவில்லை - 05

ENG vs AUS: Ground Pitch Report

இந்தப் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 53 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 28 முறை இரண்டாவதாகபேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 251 ரன்களாக ஊள்ளது. மேலும் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 481 ரன்கள் உள்ளது. மேலும் இங்கு பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

England vs Australia Possible Teams

இங்கிலாந்து: பில் சால்ட்,  பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜோர்டான் காக்ஸ், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத், ரீஸ் டாப்லி

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ENG vs AUS 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: பில் சால்ட், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட், பென் டக்கெட், ஹாரி புரூக், ஸ்டீவ் ஸ்மித்
  • ஆல்-ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ஆதில் ரஷித், ஆடம் ஜம்பா, ஜோஃப்ரா ஆர்ச்சர்

ENG vs AUS 1st ODI Dream11 Prediction, Today Match ENG vs AUS, ENG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement