இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, நான்காவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
England vs Australia, 4th ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் மூன்று ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்லன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் தொடரானது 2-1 என்ற கணக்கில் உள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், அதேசமயம் இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடனும் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Trending
ENG vs AUS 4th ODI: Match Details
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
- இடம் - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
- நேரம் - செப்டம்பர் 27, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)
ENG vs AUS 4th ODI: Live Streaming Details
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தியின் வாயிலாக இத்தொடரை நேரலையில் காண முடியும்.
ENG vs AUS: Head-to-Head In ODIs
- மோதிய போட்டிகள் - 159
- ஆஸ்திரேலியா - 90
- இங்கிலாந்து - 64
- முடிவில்லை - 05
ENG vs AUS: Ground Pitch Report
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியானது நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 86 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 42 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 39 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 231 ரன்களாக ஊள்ளது. மேலும் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 334 ரன்களாக உள்ளது. இதுதவிர இங்கு பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
England vs Australia Possible Teams
இங்கிலாந்து: பில் சால்ட், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத், ரீஸ் டாப்லி
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
ENG vs AUS 4th ODI Dream11 Team
விக்கெட் கீப்பர்: பில் சால்ட், அலெக்ஸ் கேரி
பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட் (கேப்டன்), பென் டக்கெட், ஹாரி புரூக், ஸ்டீவ் ஸ்மித்
ஆல்-ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன் (துணை கேப்டன்), கேமரூன் க்ரீன், வில் ஜேக்ஸ்
பந்துவீச்சாளர்கள்: ஆடம் ஸாம்பா, ஆதில் ரஷித்
ENG vs AUS 4th ODI Dream11 Prediction, Today Match ENG vs AUS, ENG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now