
England vs Australia, 5th ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் நான்கு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியில் வெற்றிபெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ENG vs AUS 5th ODI: Match Details
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
- இடம் - கவுண்டி கிரிக்கெட் மைதானம், பிரிஸ்டோல்
- நேரம் - செப்டம்பர் 29, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)