
ENG vs IND, 2nd ODI: India restricted England by 246 runs (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோவ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஜேசன் ராய் 23 ரன்களில் ஆட்டமிழக்க, ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் யுஸ்வேந்திர சஹாலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.