
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 12) தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்துள்ளது. இதில் தொடக்க வீரர் ராகுல் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
போட்டி முடிந்து பேசிய ரோகித் சர்மா, “கேஎல் ராகுல் விளையாடியதிலேயே இதுதான் மிகச் சிறப்பான இன்னிங்ஸ். அவரது சதத்திலேயே சிறந்த சதமும் இதுதான். ஏனெனில் இந்த ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் ஆட்டத்தை கொண்டுவந்துவிட்டார். நேற்றைய ஆட்ட நேர முடியும் வரை ராகுலின் கவனம் சிறிதளவுகூட சிதறவில்லை.