
England vs India 3rd Test Dream11 Prediction: இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் வாய்ப்பை பெறும். மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவும், இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சரும் விளையாடவுள்ளனர். இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ENG vs IND 3rd Test Match Details