
ENG vs IND, Covid shadow: Manchester Test Cancellation Won't Affect WTC (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது போட்டி நாளை மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி பயிற்சியாளர்கள் ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் அகியோரைத் தொடர்ந்து பிசியோ யோகஷ் பர்மருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் நாளை ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறுமான என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்டம் குறித்த தெளிவான பார்வை இந்திய நேரப்படி நள்ளிரவுதான் தெரியவரும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கரோனா பரிசோதனை முகமை மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவு இங்கிலாந்து நேரப்படி இரவு 8 மணியளவில் வரும்.