
ENG vs IND : Indian team undergoes first training session at Headingley (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுரவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லேவில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தோடங்கவுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இன்று லண்டனிலிருந்து லீட்ஸிற்கு வந்தனடைந்தர். இந்நிலையில் லீட்ஸ் வந்தடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் முதல் நாளே பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.