
Eng vs Ind: Stuart Broad ruled out of entire Test series after tear in right calf (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இப்போட்டிக்காக இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கால் பகுதியில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, எம்.ஆர்.ஐ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், அவருக்கு ஓய்வு தேவை என்று தெரிவிக்கப்பட்டது.