
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டெவான் கான்வே, டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி சவுதாம்டானில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் இப்போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்ட்டது டாஸ் போடப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - ஹாரி ப்ரூக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 ரன்களை எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் ரன்கள் ஏதுமின்றியும், பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.