
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணியானது இந்த தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி லீட்ஸில் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமலும், வில் யங் 20 ரன்களிலும், வில்லியம்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் டேவான் கான்வே 26 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
இதனால் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.