Advertisement

ENG vs PAK, 2nd ODI: ஹசன் அலி அபாரம் - சால்ட், வின்ஸ் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
ENG vs PAK, 2nd ODI: Hasan Ali picks Fifer - Pakistan Need 248 runs to win
ENG vs PAK, 2nd ODI: Hasan Ali picks Fifer - Pakistan Need 248 runs to win (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 10, 2021 • 08:23 PM

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 10, 2021 • 08:23 PM

இதையடுத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக முதல் போட்டியில் அசத்திய டேவிட் மாலன், ஸாக் கிரௌலி இருவரும் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 

Trending

அதன்பின் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் - ஜேம்ஸ் வின்ஸ் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

பின் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிலிப் சால்ட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 56 ரன்களில் ஜேம்ஸ் வின்ஸும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 43 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்  செய்யவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement