பாகிஸ்தான் அணிக்கெதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான பாகிஸ்தான் அணி கடந்தவாரம் தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈயன் மோர்கன் தலைமையிலான அணியில், இலங்கை அணியுடனான தொடரில் விளையாடிய வீரர்களே இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி: ஈயன் மோர்கன் (கே), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, சாம் கரண், டேவிட் வில்லி, டாம் கரண், ஆதில் ரஷீத், மார்க் வுட், லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், லியாம் டௌசன், ஜார்ஜ் கார்டன், டாம் பான்டன்.
Win Big, Make Your Cricket Tales Now