
ENG vs SL, 1st ODI: An unbeaten 79 from Joe Root helps England register a five-wicket win over Sri (Image Source: Google)
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் குசால் பெரேரா, வானிந்து ஹசரங்கா ஆகியோர் அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க வில்லை.
இதனால் 42.3 ஓவர்களிலேயே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் 185 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 73 ரன்களையும், வானிந்து ஹசரங்கா 54 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.