
Eng vs SL 2021: Avishka Fernando ruled out of ODI series (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடைபெறுகிறது. ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நெருக்கடியான சூழலில் உள்ளது.
இந்நிலையில் படுதோல்விகளைச் சந்தித்து வரும் இலங்கை அணிக்கு தற்போது பேரதிர்ச்சியாக நட்சத்திர வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.