
ENG vs SL: Tom Banton added to England squad for final ODI against Sri Lanka (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிகான இங்கிலாந்து அணியில், அதிரடி வீரர் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களினால் டேவிட் மாலன் ஒருநாள் தொடரிலிருந்து விலகியதை அடுத்து, டாம் பான்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.