
England vs West Indies 2nd Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம், இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ENG vs WI 1st Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்ஹாம்
- நேரம் - ஜூன் 18, மதியம் 3.30 மணி (இந்திய நேரப்படி)
ENG vs WI 1st Test Pitch Report