ENG vs WI, 3rd Test: போட்டியில் இருந்து விலகிய கெவின் சின்க்ளேர்; ஷமார் ஜோசப் விளையாடுவதும் சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் விலகியுள்ளதாக அந்த அணி அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்ஹாமில் நடைபெற உள்ளது.
இதில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் இரண்டாவது டெஸ்டில் இடம்பிடித்த வீரர்களே இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஏனெனில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மையா லூயிஸ் இடம்பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் அகீம் ஜோர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த அணிக்கு மேலும் பின்னடவை தரும் வகையில் நட்சத்திர வீரர்களான கெவின் சின்க்ளேர் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோரும் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கெவின் சின்க்ளேர் இதுவரை குணமடையாத காரணத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SQUAD UPDATE
— Windies Cricket (@windiescricket) July 25, 2024
Motie replaces Kevin Sinclair who played in Nottingham but has suffered a fractured forearm after being struck by a short ball from Mark Wood.
Sinclair has remained with the squad in Birmingham but was unavailable for selection.#ENGvWI | #MenInMaroon pic.twitter.com/fKlLQ91dnJ
அதேசமயம், அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் காய்ச்சலால் பதிக்கப்பட்டதன் காரணமாக அவரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ஷமார் ஜோசப்பும் இப்போட்டியில் விளையாடவில்லை என்றால், அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
Win Big, Make Your Cricket Tales Now