
England Announce 12-Member Squad For 1st West Indies Test; Ollie Robinson Ruled Out (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 0-4 எனத் தோற்றது இங்கிலாந்து. அடுத்ததாக, நாளை (மார்ச் 8) முதல் வெஸ்ட் இண்டீஸில் 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
ஆன்டிகுவாவில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஒல்லி ராபின்சன் முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை.
ஆண்டர்சன், பிராட் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் ஆலி ராபின்சனும் காயமடைந்து முதல் டெஸ்டில் விளையாடாதது இங்கிலாந்து அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இத்தொடரில் இங்கிலாந்து அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக பால் கோலிங்வுட் பணியாற்றுகிறார்.