
England counties offer to host remainder of IPL 2021 in September (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் மற்றும் வீரர்களுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியான தகவலில், லண்டன், பர்மிங்ஹாம், எம்சிசி, லார்ட்ஸ் ஆகிய இடங்களை மையமாக கொண்டு ஐபிஎக் தொடரின் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடத்தி முடிக்க விரும்புவதாக இங்கிலாந்து கவுண்டி கிளப் பிசிசிஐயிடம் அனுமதி கோரியுள்ளது.