
England Dominate In First Session On Day 4; India Score 229/7 At Lunch (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரிஷப் பந்த் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.
132 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்திருந்தது.