
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது .
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் இருந்தாலும் மலையின் காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டதால் ட்ராவில் முடிவடைந்தது .
இந்த இரண்டு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 27 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி முயற்சிக்கும் . மறுபுறம் ஆஸ்திரேலியா அணி இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற போராடும் .