நியூசி தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இத்தொடருக்கான பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் காயமடைந்தார். அதன் காரணமாக அவர் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Trending
இந்நிலையில் காயம் காரணமாக விலகியுள்ள ஜோஷ் டங்குக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ள ஜோஷ் டங்குக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 34 வயதாகும் கிறிஸ் ஜோர்டன் இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இங்கிலாந்து அணிக்காக 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் ஜோர்டன் 96 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர், ரெஹான் அகமது, மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், கிறிஸ் ஜோர்டான், பிரைடன் கார்சே, லூக் வூட்.
Win Big, Make Your Cricket Tales Now